வாழ்க்கை தத்துவங்கள் | Valkai Thathuvangal | Tamil Life Quotes

வாழ்க்கை தத்துவங்கள்

1) வாழ்க்கையில் விட்டுப் போன பொய்யான உறவுகள் மீண்டும் தொடரும் நிலை வந்தால், வேண்டாம் என்று முடிவெடுக்கணும்.
ஏனென்றால் வார்த்தைகளில் தான் மாற்றம் இருக்குமே தவிர, மனதில் அதே அழுக்கு தான் இருக்கும்!!


2) நமது பொறுமையின் எல்லை என்பது... அதை சோதிப்பவர் யார் என்பதைப் பொறுத்து மாறுபடுகிறது...!


3) துன்பத்தில் துணையாகாத எதுவும், இன்பத்தில் இளைப்பாற்றிட அவசியமற்றது...!


4) ஒருவரின் இழப்பை சரி செய்ய மற்றொருவரைத் தேடுவது... வாழ்க்கையின் இறுதி வரை உங்களை அடிமையாக்கும்..!


5) ஒருவரைக் காரணத்தோடு பிடித்திருந்தால் அது தேவை... காரணமே இல்லாமல் பிடித்திருந்தால் அது தான் அன்பு...!!


6) வேண்டியது கிடைத்தால் இறைவனுக்கு நன்றி சொல்கிறோம்... ஆனால் அளவுக்கு அதிகமாக கிடைத்தால் இறைவனையே மறந்துவிடுகிறோம். அதுதான் மனித குணம்!


7) முடிந்ததை சிறப்பாகச் செய்தால் அது திறமை... முடியாததைச் செய்ய முயற்சித்தால் அது தன்னம்பிக்கை...
நம்மை நாமே வெறுக்காமல் இருப்பது முதற்கடமை. முன்னேற்றத்திற்கு சுயநம்பிக்கை அவசியம்.
பிறர் குற்றங்களை மன்னிக்க சிறந்த குணம் நல்லவர்களிடம் மட்டுமே இருக்கும்.
உங்களுக்கு விருப்பமானதைப் போல மற்றவர்களுக்கும் சுதந்திரம் தேவை. சுதந்திரமில்லாத எதுவும் வளராது.
பணத்தால் அன்பையோ நிம்மதியையோ வாங்க முடியாது.
வீரனைப் போரிலும், நண்பனை கடந்த காலத்திலும், நல்லவனை கடனிலும் அறியலாம்.


8) எவருக்கும் இரண்டாவது வாய்ப்பாக இருக்காதே!


9) தாழ்வு மனப்பான்மை வருகிறதென்றால், நீ இருக்கும் இடம் தவறானது.


10) உன்னைப் பொருட்டாகக் கருதாதவர்கள் அழைத்தால் ஓடாதே. எப்போதும் கிடைக்கக்கூடிய இடத்தில் நீ இருக்க வேண்டாம்.


11) வாழ்விற்குள் வருபவர் அனைவரும் உனக்கானவர்கள் அல்ல. சிலர் பயணத்தில் கடந்து போவதற்கே.


12) உன்னைப் புரிந்துகொள்ளாதவர்களிடம் மன்றாடாதே. பலர் புரிந்தும் புரியாதது போலவே இருப்பார்கள்.


13) தேவையற்ற இடங்களில் நீ இருப்பதை நிறுத்து. இல்லையெனில், நீயே உன் தன்மானத்தை இழக்கலாம்.


14) வேண்டாமென மறுப்பவர்களுக்கு பிடிவாதமாக முக்கியத்துவம் கொடுத்தால், புறக்கணிப்பை அனுபவிக்க நேரிடும்.


15) உன்னை விரும்பாதவர்கள் மோசமானவர்கள் இல்லை. அவர்கள் விரும்பவில்லை அவ்வளவுதான்.


16) மணிக்கணக்காக பேசியவர்கள் திடுமென மௌனமாகி விட்டால், வற்புறுத்தாதே. மௌனமும் ஒரு மொழிதான்.


17) நிரந்தரமானவர் எவருமில்லை. வெறுமைக்கு மனதைத் தயார்படுத்திக் கொண்டு, கூட்டத்திலும் தனிமையில் வாழ பழகு.