நாவிருந்து புறப்படும் வார்த்தை...
நாக்கு வன்மையானது தான். நாவின் உதவியோடு உருவாகி வெளிப்படும் வார்த்தை அதை விட வன்மையானது...

இதைக் குறித்து வள்ளுவர் தனது 129 - வது குறட்பாவில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

அதாவது!, தீயினால் சுட்டப்புண் வெளியே வடு இருந்தாலும், உள்ளே ஆறி விடும். ஆனால்!, நாவினால் பிறரைத் தீயச்சொல் கூறிச் சுடும் வடுவானது என்றுமே ஆறாது என்கிறார்...
.
பேச்சாற்றல் மனிதனுக்குக் கொடுத்த மிகப்பெரிய பரிசு. மற்ற உயிர்களிடமிருந்து ஈந்த பேச்சாற்றல் தான் நம்மை வேறுபடுத்திக் காட்டுகிறது...

மனிதனால் பேசாமல் வாழ முடியாது. மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு பேச்சுத் தான் வடிவம் கொடுக்கிறது. பேச்சு என்பது மிகப்பெரிய கலை...

ஒவ்வொருவரின் நாவிருந்தும் புறப்படும் வார்த்தை மற்றவருக்கு மகிழ்ச்சியைத் தரலாம்...

சிலருக்கு,மனதை உடைத்தெறியலாம். நம்பிக்கையை உடைத்தெறியலாம். ஆறாத வடுவை ஏற்படுத்தலாம். ஒருவரை சிந்தித்து வாழ வைக்கலாம். மற்றொருவரை தற்கொலைக்கும் தூண்டலாம்...

ஒரு நொடிப்பொழுதில் நம்மை உயர்வடையவும் செய்யலாம், தாழ்வடையவும் செய்யலாம்...

அதே நேரத்தில் நாவிருந்து புறப்படும் வார்த்தை மற்றவருக்கு மகிழ்ச்சியையும், தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக இருக்க வேண்டும்...

மற்றும், அவர்கள் மத்தியில் வளர்ச்சிக்கான நல்ல மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சொற்களாயின், அவரின் பேச்சு சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும்...

ஒருவர் படித்தவராய் இருந்தாலும் சரி, படிக்காதவராய் இருந்தாலும் சரி, பிறரைக் காயப்படுத்தாமல் பேச்சு அமைய வேண்டும்...

ஆம் நண்பர்களே...!

நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் வலிமை உண்டு. அத்தகைய ஆற்றலும், சக்தியும் வாய்ந்த பேச்சு நம்மிடமிருந்து வெளிப்பட வேண்டும்...!

நமது பேச்சு பிறரை மகிழ்ச்சிப்படுத்துவதாகவும், எந்த வகையிலும் பிறரைக் காயப்படுத்தாததாகவும் அமைய வேண்டும்...!!

ஒருவரிடம் பேசும் போது சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் சிந்தித்து நிதானமாகப் பேச வேண்டும்...!!!