பதட்டமும், மனஉளைச்சலும் பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது...
அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகி விடக்கூடும்...
உறுதியான சிமெண்ட் தரையையும், மரப்பெட்டியையும் தன் கூர்மையான பற்களாலும், நகத்தாலும், குடைந்து ஓட்டை போடும் எலி...
அதே மரத்தால் செய்யப்பட்ட எலிப்பொறியில் சிக்கிக் கொண்டால்!, அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் அந்த எலி பொறியை உடைக்கும் வழியை விட்டு விட்டு அந்தப் பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னாலும் பின்னாலும் பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக் கொண்டு விடும்...
நமக்கும் சரி!, சாதாரண எலிக்கும் சரி!, பதட்டமும், மனஉளைச்சலும் பலரின் சிந்தனையை செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது...
ஆம் நண்பர்களே...!
சிக்கல்களில் இருந்து தப்பிக்க வேண்டுமா...? பதட்டம், மன உளைச்சல் ஆகிய சிறைகளில் இருந்து விலகி இருங்கள்...!
🔴 உறுதியாக!, அனைத்து சிக்கல்களுக்கும் விடை காணத் தெளிவான, பதட்டமற்ற மனத்தினால் முடியும்...!!
⚫ ஆம்.!, எப்படிப்பட்ட சிக்கல்கள் வந்தாலும் மன உளைச்சலுக்கு ஆளாகிப் பதற்றத்தை உண்டு செய்யாமல் சற்று மனத் தெளிவுடன் செயல்பட்டாலே அதற்கான தீர்வு எளிதில் கிடைத்து விடும்...!!!