துவண்டு விடாதீர்கள் – Never Give Up, Rise Stronger!

துவண்டு விடாதீர்கள்...

வாழ்க்கை என்னும் பாதையில் பெரிய குழியில் நீங்கள் தடுக்கி விழுந்தாலும், இத்தோடு நம் கதை முடிந்தது என்று கருதாமல், எப்படி மேலே வருவது என்று யோசியுங்கள்...

வழியில் உங்கள் செயல்களை தடுக்கும் சில தடைக் கற்கள் இருக்கத்தான் செய்யும்.

நம்மில் பலர் அந்தக் கற்களைத் தூக்கி எறிந்து விடுவதன் மூலம் தற்காலிக நிம்மதி அடைகிறார்கள்.

ஆனால் சிலர் அந்தக் கற்களை வீட்டின் மாடியைக் கட்டுவதற்குப் படிகட்டுகளாகப் பயன்படுத்துகிறார்கள்.

இன்னும் சிலர், பெரிய வடிவமற்ற தடைக் கற்களை தங்கள் தோட்டத்தில் வைத்து அழகு பார்ப்பதற்கே பயன்படுத்துகிறார்கள்.

ஒரு விவசாயி வளர்த்த வயதான மாடு ஒன்று தவறி, தோட்டத்தில் உள்ள கிணற்றில் விழுந்தது.

மாட்டை காப்பாற்ற முயற்சிக்க முடியாத நிலையில், மாட்டுடன் கிணற்றை மூட முடிவு செய்தான்.

அக்கம்பக்கத்தினர் மண் அள்ளி கிணற்றில் போட்டனர். ஆனால் அவர்கள் எட்டிப் பார்த்தபோது, அந்த மாடு அதன் மேலே மண்ணை உதறி மேலே ஏறி வந்து, விளிம்பை எட்டியது.

மாடும் ஓடிச் சென்று விட்டது!

நம்மை தொல்லைகள் குறுக்கிடும் போது துவண்டு விடாதீர்கள்.

அதுதான் வாழ்க்கை என்று நினைத்து உங்கள் திறமைகளுக்கு நீங்கள் தான் முடிவே சொல்லக் கூடாது.

எதிர்கொள்ள முடியும் என்ற மனவுறுதியுடன், சிகரத்தை நோக்கிச் செல்க!