
ஒரு தீவுல ஒரு மீனவன் தன் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தான்.
தினமும் அதிகாலையில் தன் படகில் சென்று மதியதுக்குள்ளாகவே தேவையான அளவு மீன்களைப் பிடித்து வந்து அருகில் உள்ள கிராமங்களில் விற்று விட்டுப் போதிய பொருள்களுடன் வீடு திரும்புவான்.
மதியத்துக்கு மேல் தன் மனைவி குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் மீதப் பொழுதைக் கழிப்பான்…
ஒரு தினம் அந்தத் தீவை சுற்றிப் பார்க்க விரும்பிய அருகாமையிலுள்ள நகரத்தைச் சேர்ந்தப் பயணி ஒருவர் அவனின் படகிலேறி தீவுகளைப் பார்த்தவர், அவனிடம் அவனின் வாழ்க்கைப் பற்றி விசாரித்தார். மீனவனும் அன்றாடம் தன் வாழக்கையை விவரித்தான்.
பயணி: தினமும் மதியத்துக்குள்ளாகவே திரும்புகிறாயே… இன்னும் சற்று நேரம கூடுதலாக மீன் பிடித்தால் அதிக வருவாய் கிடைக்குமே..!
மீனவன்: அதிக பணத்தை வைத்து என்ன செய்யப் போகிறேன்?
பயணி: அதிக பணத்தில் இன்னொரு படகு வாங்கலாம், அதைப் பயன்படுத்தி நிறைய மீன் பிடிக்கலாம்.
மீனவன்: மீன் பிடித்து…?
பயணி: அவற்றை மிகுந்த பொருளுக்கு விற்றால், பெரிய மீன்பிடி கப்பல் வாங்கும் அளவுக்குப் பணம் கிடைக்கும்.
மீனவன்: சரி அப்புறம்…
பயணி: நீயே பெரிய மீன் சந்தையை உருவாக்கி மீன்களை மொத்தமாக விற்றுப் பெரும் பணம் சம்பாதிக்கலாம்.
மீனவன்: சரி பிறகு…
பயணி: பிறகு என்ன, அந்தப் பெரும் பணத்தைக் கொண்டு மனைவி குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்து இருக்கலாம். நீயும் மகிழ்ந்து இருக்கலாம்.
அப்போது மீனவன் சொன்னான்:
”அப்படித் தானே இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறேன்!”
(பயணிக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை)
ஆம், நண்பர்களே…
தேவைக்கு மேல் செல்வம் சேர்ப்பது எவ்வளவு தீதோ,
அவ்வாறே அடுத்தவர்க்குப் போய் சேர வேண்டிய பொருளைத் திருடி வைத்துக் கொள்வதற்குச் சமமே…?