துவண்டு விடாதீர்கள்...
வாழ்க்கை என்னும் பாதையில் பெரிய குழியில் நீங்கள் தடுக்கி விழுந்தாலும், இத்தோடு நம் கதை முடிந்தது. என்று கருதாமல் எப்படி குழியில் இருந்து மேலே வருவது எப்படி என்று யோசிங்கள்...

வழியில் உங்களின் செயல்களை தடுக்கும் சில தடைக் கற்கள் இருக்கத்தான் செய்யும்.

நம்மில் மிகப் பெரும்பாலானோர் அந்தக் கற்களைத் தூக்கி எறிந்து விடுவதன் மூலம் தற்காலிமாக நிம்மதி அடைகிறார்கள்,இன்பத்தைப் பெறுகிறார்கள்..

ஆனால் ஒரு சிலரோ அந்த கற்களை அகற்றிய பின் அதை தூக்கி எறிந்து விடாமல் அவற்றைத் தங்கள் வீட்டின் மாடியைக் கட்டுவதற்குப் படிகட்டுகளாகப் பயன்படுத்தி புத்திசாலிகளாக இருக்கிறார்கள்..

இன்னும் சிலரோ பெரிய பெரிய வடிவமற்ற தடை கற்களை தங்களது பரந்து விரிந்த தோட்டத்தில் , பூஙகாவில் வைத்து அழகு பார்க்கிறார்கள்.

ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான அடிமாடு ஒன்று தவறி அவர் தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில் விழுந்து விடுகிறது.

காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்த மாட்டின் விலையை விட அதிகம் செலவு பிடிக்க கூடியதாக இருந்தது.

அந்த கிணறு எப்படியும் மூடப் படவேண்டிய ஒன்று.தவிர அது மிகவும் வயதான மாடு என்பதால் அதைக் காப்பாற்றுவது வீண் வேலை என்று முடிவு செய்த அவர், மாட்டுடன் அப்படியே அந்த கிணற்றை மூடி விடுவது என்று முடிவு செய்தார்..

அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு கூப்பிட அனைவரும் திரண்டனர்.. சற்று அருகில் இருந்த மண் திட்டில் இருந்து மண்ணை மண்வெட்டியில் அள்ளி கொண்டு வந்து அந்த கிணற்றில் அனைவரும் போட்டார்கள்..

ஒரு பத்து நிமிடம் மண்ணை அள்ளி கொட்டியவுடன் கிணற்றுக்குள்ளே எட்டிப் பார்த்தார்கள். அவர்கள் பார்த்த காட்சி அவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இவர்கள் மண்ணைப்போட, போட மாடு தனது முயற்சியை கை விடாது, உடலை உதறி உதறி மண்ணை கீழே தள்ளி அதன் மீது ஏறி,நின்று கொண்டு இருந்தது.. இவர்கள் மீண்டும் மணலை கொட்டவும் அந்த அடிமாடு ஒரு வழியாக கிணற்றின் விளிம்பை எட்டியவுடன் மாடு ஒரே ஓட்டமாக ஓடி தோட்டத்திற்குள் சென்று மறைந்தது..

ஆம்., நண்பர்களே...!

நம்மை தொல்லைகள், துன்பங்கள், தடைகள் குறுக்கிடும் போது துவண்டுவிடாதீர்கள்...

அதுதான் வாழ்க்கை என்று உங்கள் திறமைகளுக்கு நீங்களே முற்றுப் புள்ளி வைக்காதீர்கள்...

அதையும் மீறி நம்மால் முடியும், எதிர்கொள்ள முடியும் என்ற மனவுறுதியுடன் சிகரத்தினை நோக்கி சலிப்பு இன்றிப் பயணம் செய்யுங்கள்...